லியோ படத்தை பார்த்துவிட்டு கால் செய்த ரஜினிகாந்த்! அதுவும் யாருக்கு தெரியுமா?

leo vijay rajini

விஜய் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 210-கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் மிரட்டல் சாதனை! ஆனாலும் ‘2.0’ சாதனையை முறியடிக்காத ‘லியோ’!

இந்த நிலையில், மக்களை போலவே திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக கூறிவருகிறார்கள். குறிப்பாக கீர்த்தி சுரேஷ், கிருஷ்ணா, கதிர், உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு ஒருவருக்கு கால் செய்து பாராட்டி உள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமார் தான். ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு லலித் குமாருக்கு கால் செய்து படம் குறித்து பேசியுள்ளார். அவருக்கு கால் செய்து “லியோ மிகவும் நல்ல திரைப்படம். படத்தை நன்றாகவும் பிரமாண்டமாகவும் தயாரித்துள்ளீர்கள்” என்று கூறியுள்ளாராம். இந்த தகவலை லலித் குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

லியோ வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன்! நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

மேலும், இதைப்போலவே படம் வெளியாவதற்கு முன்பு அதாவது லியோ படம் வெளியாகும் இரண்டு நாட்களுக்கு முன்பு தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புக்காக சென்றுகொண்டிருந்த ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் லியோ படம் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு லியோ படம் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன் என கூறினார்.

அதைப்போலவே, லோகேஷ் கனகராஜுக்கும் கால் செய்து படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இப்படி லியோ படத்திற்கு தொடர்ந்து ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதால் விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் ரஜினியை பாராட்டி வருகிறார்கள்.  மேலும், ரஜினிகாந்த் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் தன்னுடைய 171-வது படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது அவர் தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்