ககன்யா திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு..!

isro

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்   விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 கன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையில் இருந்து 16.6  கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும். இந்த சோதனை வெறும் 20 நிமிடத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி விண்கலம் 16.6 கி.மீ தூரம் சென்றதும் விண்கலத்தில் வீர்ரகள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும்.

பின் பாராசூட் மூலம், பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கப்படும்.  சோதனை காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மோசமான வானிலை காரணமாக 8.30-க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக இந்த சோதனைக்கு மேலும் தாமதமாகும் என அறிவித்து இருந்த நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை கவுண்ட்டவுன் நிறுத்தபட்டுள்ளது. அதன்படி, இன்று மாதிரி விண்கலம் சோதனை நடைபெறாது என்றும், மற்றோரு நாளில் இந்த சோதனை நடத்தப்படும் என்றும், இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், விண்கலத்தின் இஞ்சினில் என்ன கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய உள்ளோம். விண்கலம் உள்ளிட்ட ராக்கெட் முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது. தானியங்கி எஞ்சினில் என்ன கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பது விரைவில் கண்டறிந்து அறிவிக்கப்படும். விரைவில் விண்கலம்  செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்