காசாவில் உள்ள 2-வது பெரிய மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்..!
கடந்த 15 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் உணவுவின்றி தவிர்த்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
நீட் தேர்வு – திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடக்கம்..!
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதற்கு, ரஷ்யா, கனடா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், காஸாவில் உள்ள இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த போவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை அறிவித்துள்ள நிலையில், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அப்பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.