தலைப்பு சர்ச்சை: சமரசம் வெற்றி…தெலுங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்!

LeoTelugu 16crores

தெலுங்கு பதிப்பில் நேற்று வெளியான நடிகர் லியோ திரைப்படம், ஒரே நாளில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான “லியோ” திரைப்படடத்தில், நடிகர் விஜய்யை தவிர, நடிகை த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சாண்டி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.130 கோடிக்கு வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

விஜய் திரை வாழ்க்கையில் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் மற்றும் தமிழ் சினிமாவில் 3-வது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதைதவவிர, தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்ததுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போக, முதல் நாளில் படத்தின் மொத்த வெளிநாட்டு வசூல் சுமார் ரூ.60 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கோலிவுட்டை மிரள வைத்த விஜய்! ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,  தெலுங்கில்  ‘LEO’ டைட்டில் பயன்பாடு குறித்து தொடரப்பட்ட வழக்கில்,  (20ம் தேதி) இன்று வரை வெளியிட இடைக்கால தடை விதித்து ஹைதராபாத் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லியோ படத்தில் நடிக்க யாரெல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார்கள் தெரியுமா?

பின்னர், லியோ தயாரிப்பு நிறுவனம், வழக்கு தொடர்ந்த ‘D Studio’ என்ற நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், லியோ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு திட்டமிட்டபடிநேற்று வெளியானது. இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தெலுங்கில் வெளியான லியோ திரைப்படம் ஒரே நாளில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் வெளியீட்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்