இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.! கனடா வெளியிட்ட புதிய அறிவிப்பு.!

India Canada

2007இல் பஞ்சாபில் நடைபெற்ற குண்டுவெடிப்பு,  சில பிரிவினவாத செயல்பாட்டில் ஈடுபட்டு இந்திய அரசால் தேடப்பட்டு வந்த பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.  மேலும் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா – கனடா உறவுகள் இடையே கடும் விரிசல் உண்டானது. இந்த விரிசல் உச்சக்கட்டம் அடைந்து, கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை அந்நாட்டு அரசு வெளியேற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசும், இங்குள்ள ஒரு கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது – அதிபர் பைடன்

இந்த சம்பவத்திற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட கனடா பிரதமர் , ஹர்தீப் சிங் நிஜார் கொலை தொடர்பான ஆதாரங்களை பிரதமர் மோடியிடம் கொடுத்தாகவும், ஹர்தீப் சிங் கொலை தொடர்பான விசாரணைக்கு இந்தியா இணைந்து செயல்பட கேட்டுக்கொண்டதாகவும்,  இரு நாட்டு உறவு பற்றி ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

அண்மையில் மத்திய அரசு, இந்தியாவில் மொத்தம் 62 கனடா தூதர்கள் இருக்கிறார்கள் . அதில் 41 பேரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கனடா நாட்டு அரசை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது 41 தூதரக அதிகாரிகளை கனடா நாட்டு அரசு திரும்ப பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு தற்போது இந்தியாவுக்கான புதிய பயண கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு பயணம் செய்யும் கனடா நாட்டினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும். அங்கு பல்வேறு ஆபத்தான பகுதிகள் உள்ளன என்றும் எச்சரித்துள்ளது.

அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கு அத்தியாவசமின்றி செல்ல வேண்டாம், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளது  என்றும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் இருந்து 10 கிமீக்கு அப்பால் உள்ள இடங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், 41 தூதரக அதிகாரிகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால், பெங்களூரு, சத்தீஸ்கர், மும்பையில் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு செல்ல அல்லது தொடர்பு கொள்ள விரும்புவோர் நேரடியாக டெல்லியில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்