சைத்தானை எதிர்ப்பதால் தான் சிலருக்கு கோபம் வருகிறது – அண்ணாமலை
கடந்த 18-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம்.
தற்போது பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக உள்ளார். பிஜேபியால் அதிமுக வளரவில்லை, அதிமுகவால் தான் பிஜேபி வளருகின்றது.
நாங்கள் இனிமேல் செத்தாலும் பிஜேபி கூடவோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளவர்கள் யாருடனும் சேர மாட்டோம் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நாங்கள் விவசாயம் பண்ணி, ஆடு மாடு வளர்த்து அரசியலுக்கு வந்தவர்கள். ஷைத்தானுக்கு பாஜகவில் வேலை இல்லை. சைத்தானை எஹிர்ப்பதற்காக பாஜக உள்ளது. சைத்தானை எதிர்ப்பதால் தான் சிலருக்கு கோபம் வருகிறது என விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார்.