நடிகை ஜெயப்பிரதாவிற்கு சிறைதண்டனை உறுதி! நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!
திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த இ.எஸ்.ஐ. தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில், நடிகை ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து, சிறைதண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
நடிகை ஜெயப்பிரதா அண்ணாசாலையில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம், இ.எஸ்.ஐ. ( ESI ) பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த தொகையை தொழிலாளர் அரசு காப்பீடு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை.
இதனையடுத்து, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், இது தொடர்பாக, சென்னை மாவட்டம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. பின், நடிகை ஜெயப்பிரதா ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதன்பின், மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திரையரங்கு ஊழியர்களிடம் வசூலித்த ESI தொகையை செலுத்தாதது தொடர்பான வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்.
அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய மனு அளித்திருந்த நிலையில், அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஆறு சிறைதண்டனையை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தவை பிறப்பித்துள்ளது.
ஜெயப்பிரதா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இதுவரை அவர் 280 மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவரது தந்தை கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அவருடைய தாய் நீலவாணி ஜெயபிரதாவை இளம் வயதிலேயே இசை மற்றும் நாட்டிய கற்பிக்க சேர்த்துவிட்டார். பின்னர், தனது நடிப்பு திறமையால் சினிமாக்குள் என்ட்ரி கொடுத்து நடிக்க தொடங்கி பிரபலமாகினார்.