தெலுங்கானாவில் ஆட்சி அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.! ராகுல்காந்தி உறுதி.!

RahulGandhi Congress MP

வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் தென் இந்தியாவில் தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானதாக உள்ளது. காரணம், தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு, அதற்கு பிறகான 2 தேர்தல்களிலும் பிஆர்எஸ் கட்சி பெரும்பான்மை பெற்று, சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி மற்றம் நடைபெறாத தெலுங்கானாவில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இங்குள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை பிஆர்எஸ் கட்சி கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உள்ளது. கர்நாடகாவை போல இங்கும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!

ஏற்கனவே, காங்கிரஸ் தெலுங்கானாவில் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டது . அதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தெலுங்கானாவில் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று தெலுங்கானா மாநிலம் பூபாலபள்ளியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் , தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஏற்கனவே சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது .அதே போல தெலுங்கானாவிலும் கணக்கெடுப்பை நடத்துவோம்.  தெலுங்கானாவில் முதல்வர் கே.சி.ஆர் குடும்பம் எவ்வளவு கொள்ளையடித்திருக்கிறது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தெரிந்துவிடும்.

ஆளும் பிஆர்எஸ் மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு காங்கிரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பிரச்சாரத்திற்கு வரும் போது, நீங்கள்  (தெலுங்கானா மக்கள்), அவர்களை பார்த்து, எப்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளீர்கள் என்று கேட்க வேண்டும்.

2014ல் தெலுங்கானா தனி மாநில அந்தஸ்தை பெற்ற போது, மக்கள் பல்வேறு கனவு கண்டனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் மக்களிடம் இருந்து விலகி, அவரது குடும்பத்திற்காக மட்டுமே மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, தற்போது மிக முக்கிய தேவை. இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து வெளிப்படையாக பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும்.  இந்தியாவிலேயே தெலுங்கானாவில் தான் அதிக ஊழல் நடக்கிறது. இது தெலுங்கானா இளைஞர்கள் மற்றும் பெண்களை மோசமாக பாதிக்கிறது என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பிரச்சாரத்தில் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்