சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு தேதி அறிவிப்பு…!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இம்மாதத்தில் மூன்று முறை திறக்கப்படுகிறது.
நிறைபுத்தரசி பூஜைக்காக ஆக.14 மாலை 5 மணிக்கு திறக்கப்படும் ஆக.15 தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6-6.30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரசி பூஜை நடைபெறும்.பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும் அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி மாத பூஜைக்காக ஆக.16 மீண்டும் நடை திறக்கப்பட்டு ஆக.17(மறுநாள்) அதிகாலை நடை திறந்து பூஜைகள் தொடங்கும் 21 தேதி வரை எல்லா அபிஷேகங்களும் நடைபெறும்.21 தேதி அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஒணம் பூஜைக்காக 23 தேதி நடை திறக்கப்பட்டு 27 தேதி வரை பூஜைகள் நடைபெறும் 27 தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் மற்றும் திருவேணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் ஒணவிருந்து நடைபெறும்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்