முதல் படமே இன்னும் ரீலிஸ் ஆகாம இருக்கையில அடுத்த படத்தில் ஜோடி போடும் பருத்திவீரன் கார்த்தி-ராகுல் ஜோடி
பருத்திவீரன் புகழ் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்த முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டாவது முறையாக கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
நடிகர் கார்த்தி தற்போது ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் நடிகர் கார்த்தி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் மீண்டும் ஒரு படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அந்தப் படத்தை இயக்குநர் கண்ணனின் உதவியாளர் ரஜத் இயக்குகிறார்.
அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். அந்தப் படம் முடிந்ததும், அடுத்த வருடத்தில் ராகுல் – கார்த்தி இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.