தமிழகத்தில் 5- மாவட்டங்களில் விஸ்வரூபம்-2 வெளியாகவில்லை …!சிக்கலில் விஸ்வரூபம்-2…!குழம்பும் ரசிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை.
இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) விஸ்வரூபம்-2 வெளியானது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு மத்தியில் இன்று படம் மிகவும் பிரமாண்டமாக வெளியானது.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை.இதில் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படம் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பாகத்திற்கும் பல்வேறு பிரச்சினைகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.