#INDvBAN: ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்.. விராட் கோலி பவுலிங்! பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

INJURY

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்று 17ஆவது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடி வருகிறது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய வங்கதேசம் அணியின் தொடக்க ஆடடகரர்களான தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் ஆகியோர் விக்கெட்டை விடாமல் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து விளையாடி வந்தனர்.

இவர்களது விக்கெட்டை எடுக்க இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முயற்சி எடுத்தனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் மாறி மாறி முயற்சி செய்து பார்த்தும் விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக இருவரும் விளையாடினர். ஆடுகளம் பெரிய அளவில் பந்துவீச்சுக்கும் சாதகமாக செயல்படவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு வங்கதேச தொடக்க வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி ரன்களை சேர்த்து வந்தனர்.

இந்த சூழலில், இப்போட்டியின் 9வது ஓவரை இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா வீசி வந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரிகள் சென்றது. முதல் மூன்று பந்துகளை வீசிய நிலையில், ஹர்திக் பாண்டியா திடீரென்று கீழே விழுந்து வலியால் துடித்தார். அங்கிருந்து மருத்துவக்குழுவினர் களத்திற்கு வந்து ஹார்திக் பாண்டியாவை பரிசோதித்தனர். அதன்பிறகு ஹார்திக் பாண்டியா எழுந்து நின்று பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் வலி தாங்க முடியாததால் அவர் பெவிலியன் நோக்கி சென்றார்.

இதனைத்தொடர்ந்து, ஹார்திக் பாண்டியா ஓவரில் மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசி முடித்தார். விராட் கோலியிடம் பந்து சென்றவுடன் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.விராட் கோலிகு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே 2011 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் கூட பந்து வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. மறுபக்கம் பெவிலியன் திரும்பிய ஹார்திக் பாண்டியா மீண்டும் பந்துவீச அல்லது பேட்டிங் வருவாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா காயம் குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது, மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. காயம் பெரியளவில் இருக்காது என நம்பப்படுகிறது. மீண்டும் களத்திற்கு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் வங்கதேச அணி 4 விக்கெட் இழந்து 146 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. தன்சித் ஹசன் 51, லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்