‘மகா கவிதை’ – ஐந்து லட்சம் பரிசு..! அறிவுப் போட்டி அறிவித்த கவிஞர் வைரமுத்து..!

Vairamuthu

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்கள் மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரை அவர் கவிதை தொகுப்பு, நாவல்கள் சிறுகதை தொகுப்பு என  38  படைப்புகளை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், 39-ஆவதாக  மகா கவிதை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற தலைப்பில் அறிவுப்போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளார். 5 எழுத்துகளையும், உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதன்படி ‘மகா கவிதை’ என்ற 5 எழுத்துக்களில் உள்ள 5 உள்ளடக்கத்தை கண்டறிந்தால், ஒரு எழுத்திற்கு ஒரு லட்சம் வீதம் மொத்தம் 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டியில் பங்கு பெற விரும்புவோர் 5 எழுத்துக்களின் உள்ளடக்கங்களையும் mahaakavithai.vairamuthu@gmail.com என்ற இ-மெயிலுக்கு நவம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் பரிசு வெல்லுபவர்களுக்கு, ரூ.5 லட்சம் பரிசை விழா மேடையில் வைத்து வழங்குவோம் என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்