உக்ரைன் உணவகத்தில் திடீர் தாக்குதல்: இரண்டு பேர் உயிரிழந்தனர்!

ukraine

உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார்.

நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய  ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது.

இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண் என்று கூறப்படுகிறது.

மைக்கோலைவ் நகரிலிருந்து வடமேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்டெபோவ் என்ற சிறிய கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக மைக்கோலைவ் கவர்னர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்த போர் தாக்குதல் சற்று குறைந்த இந்த நேரத்தில், நேற்று நடந்த இந்த தாக்குதல் உக்ரைனில் மேலும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. மறு பக்கம், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் 10 நாட்களுக்கும் மேல் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்