அமெரிக்க அதிபர் பைடனை தொடர்ந்து ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம்..!

Rishi Sunak

இஸ்ரேல்-பாலத்தீன போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், காஸாவை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாக அமையும்; காஸாவில் இருந்து ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அதனை ஆக்கிரமிக்கக்கூடாது என்றும், ஹமாஸ் அமைப்பிற்கு பாலஸ்தீனியர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. ஹமாஸ்  அமைப்பு, அல்கொய்தா அமைப்பை விட  பயங்கரமானது என்றும் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, காஸாவில் மருத்துவமனை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றார். அங்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும் என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

அமெரிக்க அதிபரை தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து செல்ல உள்ளார். இஸ்ரேல் செல்லும், பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்