Honor X50 GT: அடுத்த அறிமுகத்திற்கு ரெடியான ஹானர்.! எந்த மாடல் தெரியுமா.?
ஹானர் நிறுவனம் அக்டோபர் 18ம் தேதி அதன் பிளே சீரிஸில் புதிய ஹானர் பிளே 8டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இப்போது விரைவில் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, ஹானர் எக்ஸ்50 ஜிடி (Honor X50 GT) ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் எக்ஸ்40 ஜிடி (Honor X40 GT) ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளது. இதன் வெளியீட்டு தேதி தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளியாவதை கருத்தில் கொண்டு, சில நாட்களில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளே
ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போன் ஆனது 2388 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.81 இன்ச் கர்வ்டு ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வரலாம். ஆனால் இந்த டிஸ்பிளே எல்சிடி அல்லது ஓஎல்இடி பேனலைக் கொண்டிருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு முந்தைய மாடலான ஹானர் எக்ஸ்40 ஜிடியில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.81 இன்ச் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. எனவே இந்த டிஸ்பிளேயிலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இருக்கலாம்.
பிராசஸர்
அட்ரினோ 660 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஹானர் எக்ஸ்50 ஜிடி ஸ்மார்ட்போனில் பொருத்தப்படலாம். இதில் ஆன்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மேஜிக் ஓஎஸ் 7.2 உள்ளது. ஹானர் எக்ஸ்40 ஜிடியிலும் இதே ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உள்ளது.
கேமரா
இதில் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபில் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம். அதன்படி, இதில் 50 எம்பி மெயின் கேமரா இருக்கலாம். மற்ற கேமராக்கள் குறித்த விவரங்கள் வெளியாக வில்லை. முன்புறம் செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொறுத்தப்படலாம். ஹானர் எக்ஸ்40 ஜிடியில் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது.
பேட்டரி
அதோடு ஹானர் எக்ஸ்50 ஜிடியில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4800 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்படலாம். ஹானர் எக்ஸ்40 ஜிடியிலும் 4800 mAh பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்ய 66 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதனால் 30 நிமிடங்களில் 90 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
இத்தகைய அம்சங்களை கொண்ட ஹானர் எக்ஸ்50 ஜிடி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டில் அறிமுகமாகலாம். விலையைப் பொறுத்தவரையில் முந்தைய மாடலான எக்ஸ்40 ஜிடி கிட்டத்தட்ட ரூ.24,000 என்ற விலையில் உள்ளது. இருந்தும் எக்ஸ்50 ஜிடி ஆனது 1,898 யுவான் (ரூ.21,732) இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.