Leo FDFS: திடீர் டிவிஸ்ட்…லியோ பட சிறப்பு காட்சிகள் நேரம் மாற்றம்!

நாளை வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த படியாக 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்தது. ஆனால், அதுவும் தோல்வியானது 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அந்த வகையில், புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் புதுச்சேரியில் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் வல்லவன் அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியானது.
ஆனால் தற்பொழுது, டிக்கெட் விநியோகிப்பதில் பல்வேறு நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் காலை 9 மணிக்கு மேல் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் படம் என்றாலே பிரச்சனை…லியோவில் ஆபாச வார்த்தை இருக்காது – லோகேஷ் கனகராஜ் பேட்டி!
மறுபக்கம், தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் முதல் காட்சி 9 மணிக்கு வெளியாவதால், புதுவையில் 7 மணிக்கு திரையிட முடியாது எனவும், முதல் காட்சியாக 10 மணிக்கு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், காலை 7 மணி காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தும் திரையரங்குகள் முன்வரவில்லை என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025