ஊழல் வழக்கில் சிக்கிய ரியோ ஒலிம்பிக் குழுவின் தலைவர் கைது – பிரேசில் நீதிமன்றம் உத்தரவு…..!

கடந்தாண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது ஊழலில் ஈடுபட்ட ரியோ ஒலிம்பிக் குழுவின் தலைவர் கார்லோஸ் நூஸ்மான் பிரேசில் காவலாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
பிரேசில் நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்தாண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி ரியோ ஒலிம்பிக் குழுவின் தலைவர் கார்லோஸ் நூஸ்மான் பிரேசில் காவலாளர்களால் கைது செய்யப்பட்டார்.
இதுதவிர ரியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைமைச் செயல் அதிகாரி லியோனார்டோ கிரைனரையும் காவலாளர்கள் கைது செய்துள்ளனர்.
நூஸ்மானின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ள காவலாளர்கள், அவர் மீது ஊழல், பணமோசடி மற்றும் கிரிமினல் வழக்குகளைப் பதிந்துள்ளனர்.
நூஸ்மான் தற்போது வடக்கு ரியோவில் உள்ள பெனிஃபிகா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1995 முதல் பிரேசில் ஒலிம்பிக் குழுவின் தலைவராக இருந்துவந்த நூஸ்மானின் சொத்து மதிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் 457 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் நிதி ஆதாரத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டி உள்ளார்.
நூஸ்மான், கிரனைருக்கு சொந்தமான ரூ.20 கோடி சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Comment