இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!
கடந்த ஒக்டோபர் 7ஆம் தேதி பாலத்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையத்தை மீறி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பிறகு இஸ்ரேலும் தங்களது பதில் தாக்குதலை தொடர்ந்தன. இந்த மோதலில் இதுவரை திருநாட்டை சேர்ந்தவர்களும் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன . அதே போல போரை நிறுத்த வேண்டும் என மற்ற நாடுகளும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தன. ஐநாவில் ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ராணுவ உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், தங்கள் ஆதரவு இஸ்ரேலுக்கு தான் என்பதை வெளிப்டையாக தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்துள்ளார்.
இஸ்ரேல் சென்ற பைடனை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்று இருந்தார். இந்த சந்திப்பில் ஹமாஸ் அமைப்பினர் உடனான போர் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக உதவிகள் செய்வது குறித்தும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பர் என கூறப்படுகிறது.