முதல் நாள் வசூலில் ரஜினி-அஜித்தை ஓரங்கட்டுவாரா தளபதி விஜய்? லியோ சம்பவம் லோடிங்…

Ajith Rajini -VIJAY

தமிழ் சினிமா பொறுத்தவரையில் கதை நன்றாக இருந்தால் அந்த திரைப்படங்கள் கொண்டாடாடுகிறது. அந்த வகையில், உச்ச நட்சத்திரங்களில் திரைப்படங்கள் அமோகமாக வரவேற்பது அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் வழக்கம். ஒரு திரைப்படம் வெளியாகினால் அதன் வசூல் சாதனை குறித்து அதன் வெற்றியை கணக்கிடுகிறார்கள்.

அந்த வகையில், தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர்களின் திரைப்படங்கள் வெளியானால் கோலாகலமாக கொண்டாப்படுவது வழக்கம். தற்போது, தளபதி விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்திற்கு அமோக எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

இந்த நிலையில், சினிமா வர்த்தக ஆய்வு கணிப்பின் பட, தமிழ்நாடு முதல் உலகம் முழுவதும் வரை முதல் நாள் வசூலில் விஜய்யின் திரைப்படங்கள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு அளவில் ரஜினி – அஜித் திரைப்படங்களும் உலகளவில் ரஜினியின் திரைப்படங்களும் முதல் 3 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

6YearsofMersal: 3 வேடத்தில் கலக்கிய தளபதி விஜய்! மெர்சல் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம்…

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அஜித்தின் வலிமை திரைப்படம் ரூ.36.17 கோடி வசூல் செய்து முதல் இடத்திலும், இரண்டவது இடத்தில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் ரூ.34.92 கோடி வசூல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து, ரஜினியின்  2.0 திரைப்படம் ரூ.33.58 கோடி வசூல் செய்துள்ளது.

உலக முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில், சூப்பர் ஸ்டாரி 2.0 திரைப்படம் ரூ.117.24 கோடி, கபாலி ரூ.105.70 கோடி, ஜெயிலர் ரூ.195.78 கோடி வசூல் சாதனையை இன்னும் வேறெந்த தமிழ் திரைப்படமும் முறியடிக்கவில்லை.

லியோ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட் உத்தரவு

கோலிவுட்தில் உலகளவில் வாழ்நாள் வசூல் சாதனை படைத்த லிஸ்டில், ரஜினியின் 2.0 ரூ.800 கோடியும், ஜெயிலர் ரூ.650 கோடியும், பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை வேற எந்த படங்களும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளமே கொண்ட நடிகர் விஜய் இந்த சாதனைகளை தவிடுபொடி ஆக்குவாரா? இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஏன்னென்றால், விஜய்யின் லியோ படத்திற்கு மிக்பெரிய ஹைப் உள்ளதால், நாளை வெளியாகும் இந்த படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக முழுவதும் முந்தைய வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ

பல சர்ச்சைகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் நாளை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது .இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest
Madurai - Kushboo