கருணாநிதி மிகவும் கவலைக்கிடம் எதிரொலி ….!சென்னை ராஜாஜி ஹாலில்  காவல்துறையினர் ஆய்வு …!

Default Image

சென்னை ராஜாஜி ஹாலில்  காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயராம் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது.அதேபோல் இன்றும் அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

சரியாக மாலை  04.30 மணிக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.அறிக்கையில் கூறியது, கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் படிப்படியாக செயலிழப்பதால் அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை  அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில் மிகவும் கவலைக்கிடம் என்று வெளியானது.கருணாநிதி உடல்நிலையில் மிகவும்  பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் பலர் கதறி அழுது வருகின்றனர்.

 
இதன் பின்  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.வெளியிலிருந்து யாரும் காவேரி மருத்துவமனைக்குள் வர இனி அனுமதியில்லை என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.
`
 
கருணாநிதியின் மருத்துவ அறிக்கையை தொடர்ந்து சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.அதேபோல்  சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை.
 
மேலும்  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கே மூடுவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி கோபாலபுரம் திரும்பினார் .கோபாலபுரம் வீட்டிற்குள் கதறியபடியே செல்கிறார் செல்வி.
அதேபோல்  மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்ணீருடன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் தற்போது சென்னை ராஜாஜி ஹாலில்  காவல்துறை கூடுதல் ஆணையர் ஜெயராம் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்