தங்களது தொகுதியில் உள்ள காப்பகங்களுக்கு சென்று அனைத்து எம்பிக்களும் ஆய்வு செய்து அறிக்கை !மத்திய அமைச்சர் மேனகா காந்தி
உடனடியாக 1,000 பெண்கள் அல்லது 1,000 சிறுமிகளுடன் பெரிய காப்பகங்கள் அமைக்க நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பெண்களை மட்டும் குழந்தைகள் காப்பகங்களில் பணியாற்ற வைப்பதே பிரச்சனைக்கு நீண்டகால தீர்வாகும்.
தங்களது தொகுதியில் உள்ள காப்பகங்களுக்கு சென்று அனைத்து எம்பிக்களும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். சிறிய அளவிலான குழந்தைகள், பெண்கள் காப்பகங்களை பெரிய காப்பகங்களாக மாற்றி பெண்களை மட்டும் பணியமர்த்த முடிவு.முஷாபர்பூர் அரசு காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. பீகார் எம்பியிடம் தாங்கும் விடுதியிக் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.