நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை!மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட்டேக் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தனியார் உதவியுடன் தரமானசாலைகள் அமைப்பதால் சுங்கச்சாவடிகளை தவிர்க்க முடியாது.
வாகனஓட்டிகள் ஃபாஸ்ட்டேக் மூலம் ஆன்லைனில் பணம்செலுத்தி அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஃபாஸ்ட்டேக் வசதி மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.