அமித்ஷா- தோனி திடீர் சந்திப்பு ..!பாஜகவிற்கு ஆதரவு கோரி சந்திப்பு …!பாஜகவின் சந்திப்பு டார்கெட் 100000 ..!
நேற்று மாலை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்தார்.
இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் மனைவி பெயர் சாக்சி .இவருக்கு சிவா என்ற ஒரு பெண்குழந்தையும் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியின் கோப்பையை வென்றது.மேலும் இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரில் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் மட்டும் தோனி இடம்பெற்றிருந்தார்.டெஸ்ட் போட்டியில் அவர் ஒய்வு பெற்றுள்ளதால் தற்போது அவரது வீட்டில்தான் உள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நெல்லைக்கும் டி.என்.பி.எல் போட்டிக்காக வந்தார்.
இந்நிலையில் தற்போது டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் சந்தித்தார்.பின்னர் அமித்ஷா சம்பர்க் சி சமர்தான் பரப்புரை குறித்த அழைப்பிதழை தோனியிடம் வழங்கினார்.
சம்பர்க் சி சமர்தான் பரப்புரை என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைய இந்த திட்டத்தை பாஜக அறிமுகப்படுத்தியது.தமிழில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள் என்று அர்த்தம்.இந்த திட்டத்தின் படி பாஜகவின் முக்கிய தலைவர்கள் 50 பிரபலங்களை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டுவது ஆகும்.மேலும் ஊழியர்களுடன் சேர்த்து 100000 பேரை சந்தித்து மோடியின் சாதனைகுறித்து விளக்கி ஆதரவு பெற வேண்டும் என்பதாகும்.
இதன்படி நேற்று மாலை தோனியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.