ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கம் …!நிர்வாகி தற்கொலை …!
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி செல்வம் தற்கொலை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
பின்னர் அரசியலுக்கான அறிவிப்பை அதன் மூலம் வெளியிட்டார்.அதன் பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை வெளியிட்டார்.சமீப காலமாக பல்வேறு நிர்வாகிகளும் கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சனிக்கிழமை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் நியாயம் கேட்ட போது அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.