அண்ணாமலையின் வண்டவாளங்கள் ட்ரங்க் பெட்டியில் ஏற்றப்படும் – அமைச்சர் சேகர் பாபு

Sekarbabu mns

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,   100 ஆண்டுகள் பழமையான கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எம்மதமும் சம்மதமே, அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டு வருகிறோம். அனைத்து மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அண்ணாமலை  ஆதாரபூர்வமாக இதுவரை குற்றசாட்டை முன்வைத்துள்ளார். திமுக அமைச்சர்களின் மீது  அண்ணாமலை இரண்டாவது கட்ட பைல் என்று கொடுத்த புகார் என்ன ஆனது? அதில் எங்காவது இதை இவர் கையூடாக பெற்றுள்ளார், சலுகை காட்டினார் என்று ஆதாரப்பூர்வமாக கூறியுள்ளாரா?

அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல்! பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை – வானதி சீனிவாசன்

அவர் பெட்டியை கொண்டு போய் கொடுத்தது மட்டும்தான் மிச்சம்.  அண்ணாமலையின் வண்டவாளங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ட்ரெங்க் பெட்டியில் ஏற்றப்படும் என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக அண்ணாமலை அவர்கள், திருப்பூரில் பேசிய அவர், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. அதனால்தான், அறநிலையத்துறையை தமிழகத்தின் நம்பர் 1 திருடன் என்கிறேன்.

காணாமல் போன சிலைகளில், ஒன்றைக்கூட தமிழ்நாடு அரசு மீட்கவில்லை. அதனால்தான், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் எதிரான ஆட்சி நடக்கிறது என்று தெலங்கானாவில் பேசும்போது பிரதமர் மோடி சொன்னார் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k