‘சண்டைகளுக்கு போர் தீர்வாகாது’ – காசா மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து பா.சிதம்பரம் கருத்து..!

Congress Leader P Chidambaram

நேற்று காசாவில் உள்ள அல் அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலில்  500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு  500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். குழந்தைகள் நிறைந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலில் ,  சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமன்றி, தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஹமாஸ் அமைப்பு, மருத்துவமனை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை என குற்றம்சாட்டியுள்ளது. பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

காசா மருத்துவமனை மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் குறித்து பா.சிதம்பரம் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், காசாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் உண்மையாக இருந்தால், அது கண்டிக்கத்தக்கது.

தற்போதைய இரத்தக்களரி மோதலைத் தூண்டிய அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைப் போலவே இதுவும் கொடூரமானது. சண்டையை உடனடியாக நிறுத்தாவிட்டால் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்படுவார்கள். சண்டைகளுக்கு போர் தீர்வாகாது.

இந்தியாவும் பிற நாடுகளும் சண்டையை நிறுத்தவும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான வழிகளை ஆராயவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்