கருணாநிதி அவர்களைச் நேரில் பார்த்தேன் ..!குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் ட்வீட்
இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தார்.
பின்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.
இதன் பின் அவரது ட்விட்டர் பக்கத்தில் ,சென்னையில் கருணாநிதி அவர்களைச் நேரில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
திரு கருணாநிதி அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். – குடியரசு தலைவர் கோவிந்த் pic.twitter.com/SIcadbrUgg
— President of India (@rashtrapatibhvn) August 5, 2018