ENGLAND VS INDIA:சீட்டுக்கட்டுபோல் சரிந்த இந்திய அணியின் பேட்டிங்..!5 விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி ..!

Default Image

முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி  தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் நேற்று முன்தினம் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்தது.89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணி தனது 2-வது தொடங்கியது.3-வது நாளான இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது.இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் நடையை கட்டினார்கள்.

பின் உணவு இடைவேளை விடப்பட்டது.இதைத் தொடர்ந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது.போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்தது 131 ரன்கள் அடித்தது.மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 180 ரன்கள் மட்டுமே அடித்ததது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் மற்றும் இஷாந்த் சர்மா 5 மற்றும் உமேஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது  இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிதைத்து விட்டனர். இந்திய அணி 36 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது 110 ரன்கள் அடித்ததுள்ளது.
முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.தவான் 13,விஜய் 6,ராகுல் 13,ரகானே 2,அஷ்வின் 13 ரன்களில் வெளியேறினர்.பின் விராட் மட்டும் பொறுமையாக 43  ரன்களுடன் ஆடி வருகின்றார் .அவருடன் தினேஷ் ரன்களுடன் உள்ளார்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பிராடு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் இரண்டு நாட்கள் கையில் இருக்க இந்திய அணி வெற்றி பெற 84 ரன்கள் தேவைப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer