அண்ணா பல்கலை. முறைக்கேடு :24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் …!மேலும் 16,636 இதே முறை!ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம்

Default Image

லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்ணா பல்கலைகழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக மாணவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1 ஆம் தேதி ) அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா,  2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் கண்காணித்து வந்துள்ளார்.
Image result for anna university
ஒரு ஆண்டுக்கு  ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் போலீஸ் பெறப்பட்டதாக  விசாரணையில் அதிர்ச்சி தெரியவந்துள்ளது. மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக மாணவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர்  24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் தரப்பட்டிருப்பதால் சந்தேகம் அடைந்துள்ளனர்.மேலும்  மறுமதிப்பீட்டில் 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்