ENGLAND VS INDIA:சதத்தில் சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி …!இரண்டாம் இடத்தில் மற்றொரு முன்னால் இந்திய வீரர் !
நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது .இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் நேற்று முன்தினம் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 285 ரன்கள் அடித்தது.
இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்தது.89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சாதனை படைத்துள்ளார்.இது அவருக்கு டெஸ்ட் அரங்கில் 22 வது சதம் ஆகும்.குறைந்த போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியில் விராட் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.விராட் 113 இன்னிங்க்ஸசில் 22 சதங்கள் அடித்துள்ளார்.சச்சின் 114 இன்னிங்க்ஸசில் 22 சதங்கள் அடித்துள்ளார்.இதன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
குறைந்த போட்டியில் 22 சதங்கள் அடித்த இந்த பட்டியலில் முதலிடத்தில் டான் பிரட்மென் (58 இன்னிங்க்ஸ் ),இரண்டாம் இடத்தில் சுனில் கவாஸ்கர் (101 இன்னிங்க்ஸ் ),மூன்றாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் (108 இன்னிங்க்ஸ் ) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.