அண்ணா தெரியாம பண்ணிட்டேன்! இமானுக்கு கால் செய்து கெஞ்சிய சிவகார்த்திகேயன்?

d imman sk

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காடைசியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். அதன் பிறகு இருவரும் இணைந்து ஒரு படம் கூட செய்யவில்லை இதனால் இருவருக்கும் இடையே எதுவும் பிரச்னையா என்ற கேள்வி எழுந்துகொண்டு இருந்தது.

இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு!

ஆனால், இதைப்பற்றி சிவகார்த்திகேயனும் சரி, இமானும் சரி வாயை திறந்து பேசாமல் இருந்த நிலையில், டி.இமான் பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அது என்ன துரோகம் என்பதை என்னால் வெளிப்படையாக சொல்லமுடியாது. இனிமேல் நான் அவருடைய படங்களுக்கு இந்த ஜென்மத்தில் இசையமைக்கவே மாட்டேன்” என தெரிவித்து இருந்தார் .

இந்த நிலையில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், உடனடியாகவே சிவகார்த்திகேயன் டி.இமானுக்கு கால் செய்து மன்னிப்பு கேட்டாராம். வீடியோ தன்னுடைய குடும்பம் பார்த்தால் வேதனை அடைந்துவிடுவார்கள் தயவு செய்து நீங்கள் பேட்டி கொடுத்த அந்த யூடியூப் சேனலுக்கு கால் செய்து நீக்க சொல்லுங்கள் என கூறினாராம்.

என்ன மனுஷன்யா…சைலண்டாக பெரிய உதவிகள் செய்யும் “டி.இமான்”.! குவியும் பாராட்டுக்கள்.!

அதற்கு டி.இமான்  உனக்கு ஒரு பிரச்சனை என்று கூறியவுடன் என்னிடம் வருகிறாயா? என்னிடம் நீ மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாம் கடவுள் கிட்ட போய் கேளு என கூறினாராம். அதற்கு சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்டுவிட்டு நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் நேராகவே வந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியும் வேண்டாம் என்று கூறி டி.இமான் போனை வைத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருவரும் இணைந்து பல படங்களை செய்து இருக்கிறார்கள். அது மட்டுமின்றி எல்லாம் பேட்டிகளிலும் இருவரும் கலந்துகொள்ளும்போது மாற்றி மாற்றி புகழ்ந்து பேசியும் இருக்கிறார்கள். எனவே, இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தது என்பதை இருவரும் பேசினால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்