2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ..!
கடந்த ஆக.6-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்தார். தமிழகம் வந்த குடியரசு தலைவருக்கு பொன்னாடையும், புத்தகத்தையும் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பளித்தார்.
அதேசமயம், நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்தித்தார்.
செங்கல்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
இதனை தொடர்ந்து, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக 26,27 ஆகிய தினங்களில் தமிழ்நாடு வருகை தருகிறார். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உளளார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் வந்த குடியரசு தலைவர், ஒரு மாத இடைவெளியில் மீண்டும் குடியரசு தலைவர் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.