விஜய்யை பார்த்து பயந்துட்டேன்! ‘லியோ’ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த இர்பான்!

vijay and irfan

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லியோ” இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படம் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யூடியூப் பிரபலம் இர்பான் லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு அதில் விஜய் பற்றியும் அவருடன் நடித்த அனுபவம் பற்றியும் பகிர்நதுள்ளர்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “லியோ படத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சாரை முதலில் பார்க்கும்போது சற்று பயமாக இருந்தது. ஒரு பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர் எப்படி இருப்பாரோ அதே போலவே இருந்தார். பிறகு அவரே என் மீது தோளில் கையை போட்டு கொண்டு சகஜமாக பேசினார்.

பின் நான் என்னுடைய வீடியோவை பார்த்திருக்கீர்களா? என்று கேட்டேன் அதற்கு நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினார். பிறகு பேசி அவரை சந்தித்துவிட்டு புகைப்படம் எடுத்துவிட்டு செல்லும்போது என்னை கட்டியணைத்து என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தருணங்களை நான் மறக்கவே மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், லியோ திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், சூர்யா, அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இர்பான் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள காரணத்தால் அவர் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly