குடை முக்கியம் மக்களே!! அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்க போகும் கனமழை…
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிகியது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதவது இன்று இரவு 7.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால், பொது மக்கள் வெளியே செல்லும் பொழுது குடையுடன் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதன்படி, தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் திருச்சிராப்பள்ளி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, கிருஷ்ணகிரி, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.