மிசோரம் சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி..!
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9-ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் 8.52 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,276 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவு நடைபெறும்.
மிசோரத்தில் முதல்வர் சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இக்கட்சி, 3 தடவை ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. மேலும், இந்த முறையும் தாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.
The Congress’ Central Election Committee has released the list of candidates for the Mizoram Assembly elections 2023. pic.twitter.com/6MpruVSUJD
— Congress (@INCIndia) October 16, 2023