வாரத்தின் முதல் நாளில் சரிந்த சென்செக்ஸ்.! 66,265 புள்ளிகளாக வர்த்தகம்.!
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி சிறிது உயர்ந்து வர்த்தகமாகிறது.
அதன்படி, 66,238 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 17.07 புள்ளிகள் சரிவடைந்து 66,265.67 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 5.80 புள்ளிகள் உயர்ந்து 19,756.85 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் 66,034 புள்ளிகள் என வீழ்ச்சியுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 125.65 புள்ளிகள் சரிவடைந்து 66,282.74 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 42.95 புள்ளிகள் சரிவடைந்து 19,751.05 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக அமைந்தது.
முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.