ஆடி கார் மோதி 6 பேர் உயிரிழந்த விவகாரம்:கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல்!
கோவையில் ஆடி கார் மோதி 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் கோவையில் சாலையோரம் நின்றிருந்த 6 பேர் உயிரிழந்தனர்.பின்னர் நேற்று அந்த காரின் ஓட்டுனர் ஜெகதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது காவல்துறையிடம் கார் ஓட்டியபோது மது அருந்தி இருந்ததாக ஓட்டுநர் ஜெகதீஷ்குமார் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.