ஹமாஸ் படையினர் அடுத்தடுத்து கைது.! இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கை.!
பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹாமாஸ் அமைப்பினர் , இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பை விட பலம் வாய்ந்த இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் தற்போது வரை தங்கள் பதிலடி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதல் பற்றி அண்மையில் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரையில் இந்த போர் நிறுத்தப்படாது என அறிவித்துள்ளார். அதற்கேற்றாற் போல ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரபடுத்தி வருகிறது.
காசாவில் 2,215 பேர் உயிரிழபிப்பு…இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!
வான்வெளி தாக்குதலை அடுத்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை 3.3 லட்சம் ராணுவ வீரர்களை காசா பகுதி எல்லையில் களமிறக்கியுள்ளது இஸ்ரேல். இப்படியான சூழ்நிலையில், பாலஸ்தீனிய பகுதியாக இருக்கும் மேற்கு கரையில் இந்த போரின் தாக்கம் அவ்வளவாக இல்லை.
இருந்தும், பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதிக்கு விரைந்த இஸ்ரேல் ராணுவம் அங்கு சந்தேகத்திற்கு இடமாக தேடப்படும் நபர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதுவரை 40க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் 33 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்ட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் இருந்தால் அதனை பறிமுதல் செய்து வருகிறது.