#Breaking : அஜித்தின் விடாமுயற்சி பட கலை இயக்குனர் மாரடைப்பால் உயிரிழப்பு.!

Art Director Milan

தமிழ் திரைப்பட கலை இயக்குனர் மிலன் , அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்து இருந்தார். அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த இந்த படபிடிப்பில் கலை இயக்குனர் மிலன் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு தற்போது படப்பிடிப்பு வேலையின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கலை இயக்குனர் மிலன் உயிரிழந்துள்ளார்.

VidaaMuyarchi: நாங்க இங்க தான் இருக்கிறோம்! போட்டோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்த அஜித் – த்ரிஷா!

கலை இயக்குனர் மிலன் இதற்கு முன்னர் அஜித்தின் பில்லா, வீரம், வேதாளம், துணிவு போன்ற படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே போல, வேலாயுதம், பத்து தல உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் 63வது படமானது, பல மாதங்கள் கழித்து லைகா பட நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, பின்னர் கதை விவாதத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டு அதன் பின்னர், இயக்குனர் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி, பின்னர் அஜித்தின் பைக் பயணம் எல்லாம் முடிந்து தற்போது படப்பிடிப்பு தொடங்கிய திரைப்படம் விடாமுயற்சி.  இந்த சமயத்தில் இப்படி ஒரு மரண செய்தி அஜித் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்