சமூக தளங்களில் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க குழுக்கள்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிப்பு!

சமூக தளங்களில் அவதூறு பரப்புவோரையும் தவறான தகவல்களையும் பதிவுடுவோரை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்கள், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
அதாவது, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து, தடுப்பதற்கு மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் அலுவலகங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதள நுட்பங்களை அறிந்த நிபுணர்கள், இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024