இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 13 பணய கைதிகள் பலி – ஹமாஸ் அறிவிப்பு!!

Kills 13 Hostages

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பணயக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர், பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். பிடிபட்ட பிணைக் கைதிகளில் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகளும், பிற வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

முன்னதாக, முன்னறிவிப்பின்றி காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசினால் பிணைக் கைதிகளைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தது. தொடர்ந்து 8வது நாளாக இன்று தாக்குதல் தொடர்ந்த நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியுள்ளது.

இஸ்ரேலியபாதுக்காப்பு படைகள் ஐந்து இடங்களில் குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 13 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

ஹமாஸ் மீதான தாக்குதல் அதிகரிப்பு! வடக்கு காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் கெடு!

 இதற்கிடையில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் 6 மணி நேரம் தாக்குதல் நடத்த போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 6 மணி நேரத்திற்குள் வடக்கு காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் ராணுவம் கெடு வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்