சூப்பர் ஸ்டாரருக்கு சர்ப்ரைஸ்…’Thalaivar 171′ படம் LCU-ல் வருமா? லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!!

ஜெயிலர் வெற்றியை கொண்டாடி தீர்த்த ரஜினி ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டம் அளிக்கும் வகையில் ரஜினி நடிக்கவுள்ள 171-வது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. தற்காலிகமாக “தலைவர் 171” எனும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அன்பறிவு சண்டை மாஸ்டராக பணி புரிய உள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது, இதைத் தொடர்ந்து இயக்குனர் தனது அடுத்த படமான ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், லியோ ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், ரஜினியின் 171 படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை பகிர்ந்து கொண்டார். அதவாது, முன்னதாக, ‘தலைவர் 171’ திரைப்படம் LCU-ல் வருவதாக நிறைய தகவல்கள் இணையத்தில் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில், தலைவர் 171 படம் LCU இல்லாத தனித்துவமான படம் தான் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், நான் கதை சொல்லும் பொழுது, என்னுடன் அனிருத் இருந்தார். கதை சொல்லி முடித்த பின், ரஜினிகாந்த் சார் என்னை கட்டிபிடித்து “கலகிட்டா கண்ணா” என்று சொன்னார். இந்த கதை மற்றும் இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவலை அறிந்ததும் மகிழ்ச்சியாக உள்ளார்.
இந்த படத்துக்காக நான், மலையாள சினிமா எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தெரிவித்துக்கொண்டார். மேலும், இந்த படத்தின் கதையின்படி, 100% லோகேஷ் கனகராஜ் படமாக உருவாகப்போகிறதா அல்லது 50 % படமாக உருவாக போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.