Operation Ajay: 2ம் கட்டமாக இஸ்ரேலில் இருந்து 28 தமிழர்கள் டெல்லி வருகை!

Operation Ajay

8வது நாட்காளாக இஸ்ரேல் – ஹாமாஸ் அமைப்பு தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் ஹமாஸ் அமைப்பு தங்கள் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. அதன் பிறகு இஸ்ரேல் தங்கள் பதில் தாக்குதலை கடுமையாக நிகழ்த்தி வருகிறது.

இந்த ஹாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டை சேர்ந்த மக்களை மீட்டு வருகிறார்கள்.

ஆபரேஷன் அஜய் : இஸ்ரேலில் இருந்து பத்திரமாக டெல்லி வந்தடைந்த 212 இந்தியர்கள்.!

இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசும் ஈடுபட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு “ஆப்ரேஷன் அஜய்” எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்! “OperationAjay” திட்டம் தொடக்கம் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் நேற்று தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய 212 இந்தியர்களில் 14 தமிழர்கள் சென்னை வந்தனர். இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இஸ்ரேலில் இருந்து 28 தமிழர்கள் உட்பட 235 இந்தியர்கள் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர். ஏறக்குறைய இந்தியாவை சேர்ந்த 18 ஆயிரம் பேர் இஸ்ரேலில் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்