#LeoFDFS: லியோவுக்கு 4 மணி சிறப்பு காட்சி கிடையாது! வெளியானது புதிய அதிரடி அறிவிப்பு!

leo

விஜய்யின் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தமிழக அரசு.

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் அனிருத் தின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் உலகளவில் ரிலீசாக காத்திருக்கிறது.

இரு தினங்களுக்கு முன், வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, அக்டோபர் 20, 21, 22, 23, 24 ஆகிய தினங்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே 5 காட்சிக்கு அனுமதி என அறிவித்திருந்த நிலையில், அதனை தெளிவுபடுத்தும் வகையில் தற்போது புதிய அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leo Fourth Single: அக்டோபர் 16ம் தேதி சம்பவம் உறுதி.! ‘லியோ’வின் 4வது சிங்கிள் அப்டேட்…

முன்னதாக, முதல் நாள் சிறப்பு காட்சியாக 4 மணிக்கு திரையிட அனுமதி வழங்கிய நிலையில், தமிழக அரசு, தற்போது காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 19 முதல் 24ம் தேதி வரை தலா 5 காட்சிகள் திரையிட வேண்டும், அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சிகள் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறுவதை தவிர்க்க, சிறப்புக் குழு அமைக்க முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

Leo In LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!

குறிப்பாக, கடந்த முறை வெளியான லியோ பற்றிய அரசு ஆணையில் ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில், இப்பொது விஜயின் பெயரே குறிப்பிடாமல் புதிய அரசாணை வெளியாகியுள்ளது கடந்த வாரம் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசாணை வெளியாகி இருப்பதால் விஜய் ரசிகர்கள் குழப்பத்திலும் சோகத்திலும் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்