உற்சாகத்தில் ரசிகர்கள்! 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு!

2028 OLYMPICS

2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2028ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் சமீப காலமாக மும்முரமாக நடைபெற்று வந்தன. ஏற்கனவே 1896ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், போதுமான அணிகள் இடம்பெறாததால் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் 1990ம் ஆண்டு முதன் முதலாக, ஒரே ஒரு முறை கிரிக்கெட் போட்டியானது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது. அந்த போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிட்டு, இங்கிலாந்து அணி தங்கப் பதக்கத்தை வென்று இருந்தது. பின்னர் இதுவரை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இதனால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க பல்வேறு கோரிக்கை எழுந்தது.

அப்போது தான், 2024 ஜூலை மாதம் பாரீஸ் ஒலிம்பிக், 2026-ல் இத்தாலி ஒலிம்பிக்கை தொடர்ந்து,  2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், கிரிக்கெட் போட்டியை ஒரு விளையாட்டாக சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மும்பையில் ஒலிம்பிக் தொடர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மும்பையில் இன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கிரிக்கெட் போட்டியை சேர்க்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரிக்கெட் தவிர, ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய போட்டிகளையும் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரை பொறுத்தவரையில் முதலில், ஏற்பாட்டுக் குழு 5 புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த 5 விளையாட்டுகள் கிரிக்கெட், பேஸ்பால், சாப்ட்பால், கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் என கூறினார். மும்பையில் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெற உள்ளது. மும்பையில் நடைபெறும் அமர்வில் ஐஓசி வாக்களிக்க வேண்டும். LA28க்கு முன், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஆறு அணிகள் கொண்ட T20 போட்டியை ஐசிசி பரிந்துரைத்தது. இதில், பங்கேற்கும் அணிகள், ஐசிசியின் ஆடவர் மற்றும் மகளிர் டி20 தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற அணிகளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்