OnePlus 12: 6.82 இன்ச் டிஸ்பிளே, 24 ஜிபி ரேம்.! விரைவில் களமிறங்குகிறது ஒன்பிளஸ் 12.!

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் அக்டோபர் 19ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்வில் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. இந்த தகவலை டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது.
டிஸ்பிளே
டிஜிட்டல் சேட் ஸ்டேஷனின் படி, ஒன்பிளஸ் 12 ஆனது 3168×1440 பிக்சல்கள் ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளே உள்ளது. இந்த கர்வ்டு டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது.
பிராசஸர்
ஒன்பிளஸ் 12 இல் அட்ரினோ 750 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட, இதுவரை நடைமுறைக்கு வராத குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொறுத்தப்படலாம். ஆன்ட்ராய்டு 13 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 உள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளது.
கேமரா
இதன் கேமராவைப் பொறுத்தவரையில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் கூடிய 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா பொறுத்தப்படலாம்.
பேட்டரி
ஒன்பிளஸ் 12 பேட்டரியை பொறுத்தவரையில் 5,400 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் வரலாம். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கலாம்.
ஸ்டோரேஜ்
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் ஒன்பிளஸ் 12 ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் வெளியாகலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025