இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பாண்டியராஜன்! எல்லாத்துக்கும் காரணம் பாக்கியராஜ் தான்!
இயக்குனர் பாக்கியராஜ் எழுதி இயக்கிய பல திரைப்படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்த திரைப்படத்தில் பாக்கியராஜுடன் சுதாகர், சுமதி, கவுண்டமணி, எஸ்.வரலட்சுமி, சிஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை பகவதி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளரும், கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனருமான கங்கை அமரன் இசையமைத்திருந்தார். விதவை தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் வாழும் ஒரு ஏழைப் பெண்ணை மையாக வைத்து பாக்கியராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். நடிகராகவே நடித்து வந்த பாக்கியராஜ் இந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் .
இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் இது தான் முதல் படமா அவருக்கு என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு நல்ல திரைப்படத்தை மக்களுக்காக இயக்கி கொடுத்தார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜன் தூங்கவே இல்லயாம். காரணம் என்னவென்றால், அந்த படம் அந்த அளவிற்கு அவருக்கு பெரிய தாக்கத்தை கொடுத்ததாம்.
படத்தை பார்த்த பிறகு கண்களை மூடினாள் எதோ ஒரு தெருவில் நடந்து செல்வது போல இருந்ததாம். படத்தில் வந்த கதாபாத்திரங்கள் எல்லாம் தனக்கு பொருத்தும் வகையில் இருந்த காரணத்தால் படம் அவருக்கு அந்த சமயமே பிடித்ததாம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் நடித்தவர்களுடைய வயது மற்றும் உடுத்தும் உடை என அனைத்துமே பாண்டியராஜணிற்கும் பொருந்தியதாம்.
Aan Paavam : இளையராஜா வீட்டு வாசலில் உட்கார்ந்த பாண்டியராஜன்! ஆண்பாவம் படம் உருவான கதை!
பிறகு இந்த திரைப்படத்தை யார் இயக்கி இருந்தார் என்பதை அவர் தெரிந்துகொண்ட போது பாக்கியராஜ் என அவருக்கு தெரிந்ததாம். பிறகு படத்தை பார்த்த இரண்டு வாரங்களுக்கு பின் பாக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பும் பாண்டியராஜனுக்கு கிடைத்ததாம் ஆனால், படத்தை பற்றியும் அவரிடமும் பதட்டத்தில் பேசமுடியவில்லையாம்.
பிறகு நடிகராக கலக்கி கொண்டிருந்த பாண்டியராஜன் இயக்குனராக ஆசைப்பட்டுள்ளார். எனவே, எந்த இயக்குனரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்றவேண்டும் என அவர் ஆசைப்பட்ட நிலையில், பாக்கியராஜ் அவருக்கு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு வழங்கினாராம். இந்த தகவலை பாண்டியராஜனே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பாண்டியராஜன் கன்னிராசி, ஆண்பாவம், கபடி கபடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.