JioBharat B1 4G: யுபிஐ ஆதரவுடன் அறிமுகமானது ஜியோவின் புதிய ஃபீச்சர் போன்.! விலை என்ன தெரியுமா.?

JioBharat B1 4G

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் துறையில் பல சாதனைகளை படைத்து வருகின்ற நிலையில், மொபைல் போன்களையும் தயாரித்து அதனை விற்பனைக்கு கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மலிவான விலையில், இணைய வசதிகளுடன் ஜியோ பாரத் வி2 மொபைல் போனை அறிமுகம் செய்தது.

அதேபோல தற்போது கீபேடுடன் கூடிய ஜியோபாரத் பி1 சீரிஸ் ஃபீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜியோபாரத் பி1 ஆனது 2.40 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 110.00 கிராம் எடையுடைய 2000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 343 மணிநேரம் தடையில்லாமல் பாடல் மற்றும் படங்களை பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதில் ஜியோ பே, ஜியோ சினிமா, ஜியோசாவ்ன் போன்ற ஆப்ஸ்கள் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இந்த ஜியோ பே மூலம் பயனர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். இதில் 23 வெவ்வேறு வகையான மொழிகளை பயன்படுத்தலாம். 0.05 ஜிபி ரேமுடன் வரும் இந்த போனில், ஸ்டோரேஜை 128 ஜிபி வரை உயர்த்திக்கொள்ள முடியும். இதன் பின்புறத்தில் ஒரு சிறிய கேமரா உள்ளது.

இத்தகைய அம்சங்களுடன் கருப்பு நிறத்தில் வெளியாக்கியுள்ள ஜியோ பாரத் பி1  மொபைல் போன் ரூ.1,299 என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த போனை ஜியோ இணையதளம் மற்றும் அமேசான் வழியாக வாங்கிக்கொள்ளலாம். முந்தைய ஜியோபாரத் வி2 போன் 1.77 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1000 mAh பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஸ்டோரேஜை 128 ஜிபி வரை உயர்த்திக்கொள்ள முடியும். இது ரூ.999 விலையில் விற்பனையாகிறது.

இதோடு பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரூ.123 மற்றும் ரூ.1,234 என இரண்டு திட்டங்கள் உள்ளன. இதில் ரூ.123 திட்டமானது அன்லிமிடெட் கால் மற்றும் 14ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதற்கு 28 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. ரூ.1,234 திட்டம் என்பது ஒரு வருடாந்திர சந்தா திட்டம் ஆகும். இது பயனர்களுக்கு அன்லிமிடெட் கால் மற்றும் 168 ஜிபி டேட்டாவை ஆண்டு முழுவதும் வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்