ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது… இஸ்ரேல் கடும் கண்டனம்!

United Nations

காசாவில் இருந்து மக்கள் வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவில் ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். இதனைத்தொடர்ந்து, காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கு குழி, சுரங்கபாதைகளை தகர்த்து வருகிறது.

இதுபோன்று இஸ்ரேலின் நகரங்களில் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கம் ஒடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார். அதன்படி, ஹமாஸ் குழுவினர் இருக்கும் இடங்களை குறிவைத்து இஸ்ரே விமானப்படை, தரைப்படை தாக்குதல் நதி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் பலம் காயமடைந்துள்ளனர். இருப்பினும், யுத்தம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த சூழலில், 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கூறியது. ஏனென்றால், ஹமாஸ் அமைப்பினர் மீதான தொடர் தாக்குதலில் மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டது.

24 மணிநேரத்தில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றாவிட்டால் பட்டினி சாவு ஏற்படும்.! ஐநா எச்சரிக்கை.!

இதன்பி ஐநா கூறுகையில், காசாவில்  கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருந்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உணவில்லாத நிலை ஏற்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கையை கண்டித்த ஐநா அமைப்பு, இஸ்ரேலுக்கும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காசாவில் இருந்து மக்கள் வெளியேற்ற உத்தரவில் ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரேல் கூறியுள்ளது. 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் உத்தரவுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்தது.

வடக்கு பகுதியில் இருந்து 24 மணி நேரத்தில் மக்கள் வெளியேறுவது என்பது சாத்தியமில்லாதது என ஐ.நா. பதில் கூறியிருந்தது. காசா பகுதியில் மக்கள் வெளியேற முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. ஹமாஸ் மீதான தாக்குதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்